அரசாங்கத்துடன் ஒப்பந்தமிட்ட எதிர்க்கட்சி! அச்சத்தில் ரணில் தரப்பு
எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியில் உள்ள அனைவரும் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என்ற அச்சம் எழுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவரின் முதுகெலும்பற்ற தன்மையே அக்கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசிய கட்சி
“எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் கட்சியை மீண்டும் வலுப்படுத்த விரும்பினர். அதற்காக, எங்களிடமிருந்து பிரிந்த தரப்படன் நாங்கள் அனைவரும் உரையாடியுள்ளனர்.
மேலும் இந்த கட்சியை ஒரு பெரிய யானையின் அடையாளத்தின் கீழ் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது.
ஆனால் எப்போதும் இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் சிக்கிக் கொள்கிறது.
எதிர்க்கட்சித் தலைவரும் அங்குள்ள அனைவரும் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் வைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
இது எமது கட்சிக்கு பெரும் சவாலாக மாறும் என்னும் அஞ்சுகின்றேன்” என கூறியுள்ளார்.