ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் குறித்து சரத் பொன்சேகா விமர்சனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும் கட்சியின் தவிசாளருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்க விமர்சனம் முன்வைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்த போது இருந்த கௌரவம், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன் பின்னர் இல்லாமல் போயுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபானம் விநியோகம்
கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் மாவட்டம் முழுவதிலும் மதுபானம் விநியோகம் செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது கட்சி வீழ்ச்சியடைவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri