ஆளும் கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சஜித் தரப்பு எம்.பி.
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் இழிவுபடுத்தும் கருத்து
நாடாளுமன்ற விவாதத்தின் போது தாம் வெளியிட்ட கருத்து நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலியை தனிப்பட்ட ரீதியில் இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாக தென்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தாம் கொள்கை ரீதியாக கௌரவமான அரசியலில் ஈடுபடும் ஓர் நபர் என்ற வகையில் எதிர்த்தரப்புக்களுடனான மோதல்கள் கொள்கை சார்பானதே தவிர தனிப்பட்ட ரீதியானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமது ஒலிவாங்கியை இடைநிறுத்தியமை மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு புறம்பான கேள்வி எழுப்பியமை ஆகிய காரணிகளினால் ஆத்திரமுற்று வெளியிட்ட வார்த்தைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது கருத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலிக்கு ஏதேனும் மன கஸ்டங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
