ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவை நகர்மன்ற உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொலன்னாவை நகரமன்றத்துக்குத் தெரிவான உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிடகே சுசில் குமார கொஸ்தா என்பவரின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இடைநிறுத்தம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவ நகர சபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்கச் செயற்படாததால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
