ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். (Jaffna) மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம் இன்று (31) பிற்பகல் சாவகச்சேரி - மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கலந்து கொண்டோர்
இதன்போது, எதிர்க்கட்சி தலைவரும் 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கலந்து கொண்டு தேர்தல் காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.

மேலும், நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண, மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam