நாடாளுமன்றை உடன் கலைக்குமாறு கோரிக்கை
இலங்கையின் நாடாளுமன்றை உடன் கலைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் தரப்பில் கடுமையான எதிர்ப்பு
இதனால் உடனடியாக நாடாளுமன்றை கலைத்து புதிதாக மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
கால ரீதியான ஒப்பீடுகளின் பிரகாரம் நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் சேவைகளின் விலைகள் துரித கதியில் உயர்ந்துள்ளுது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டில் ஒரு லீற்றர் பெற்றோல் 309 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 424 ருபா எனவும் தெரிவித்துள்ளார்.

எரிவாயுவின் விலை 4365 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2024ம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 0.5 வீதமாக காணப்பட்டது எனவும் தற்பொழுது 8.3 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 292 ரூபாவிலிருந்து 337 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேறற்வில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை சிதைந்து விட்டது எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முஜிபுர் ரஹ்மானின் இந்த நாடாளுமன்ற உரைக்கு ஆளும் தரப்பில் கடுமையான எதிர்ப்பும் அதிருப்தியும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri