சஜித்தின் பாரிய அரசியல் காய் நகர்த்தல்:கட்சியில் பாரிய மாற்றங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உறுப்பினர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு முக்கியமான சந்திப்பு இன்று மதியம் கொழும்பில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி UNP முக்கிய உறுப்பினர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பாகும்.
எட்டப்பட்ட தீர்மானங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி UNP தரப்பில் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன,துணைத் தலைவர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

பல மணி நேரம் மிகவும் சுமுகமாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல முக்கியமான விடயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடல்களை சிறிது காலம் தொடர இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.