ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு: அவையில் அமளி
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இந்த குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் நான்கு பேருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கே.டி. லால் காந்த, வசந்த சமரசிங்க மற்றும் குமார ஜயகொடி ஆகிய நான்கு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
[7DN3EA ]
அவையில் சபாநாயகர் பிரசன்னமாகி இருந்த காரணத்தினால் அவை நடைமுறைகளை கருத்தில் கொண்டு அவற்றுக்கு மதிப்பளித்து மேலதிக விவரங்களை தாம் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பில் அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்தில் 50 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதாகவும் 450 குளங்களை நிர்மானிப்பதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக ஐந்து சதமேனும் ஒதுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதேவேளை, அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கொள்கலன்கள் தொடர்பிலும் அவர் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
எனினும் இந்த கருத்துக்கள் தொடர்பில் ஆளும் தரப்பினர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.