பொலிஸ்துறையை அரசியலாக்கியுள்ள அதிகாரி: அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு
இலங்கையின் பொலிஸ்துறையை அரசியலாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டி, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மீது, ஐக்கிய மக்கள் சக்தி (SJB), தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் நோக்கங்களுக்காக நாடு முழுவதும் சமூகப் பொலிஸ் செயலமர்வுகளை ஏற்பாடு செய்கின்ற போர்வையில் பொலிஸ் வளங்களை, தென்னக்கோன் தவறாகப் பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்தக் கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏனைய பிரசார நடவடிக்கைகள்
இந்தநிலையில், பல்வேறு அமைச்சுக்களால் மேற்கொள்ளப்படும் ஏனைய பிரசார நடவடிக்கைகளை நிறுத்துமாறும் மத்தும பண்டார தமது கடிதத்தில் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |