ஆறு அமைச்சர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஆறு அமைச்சர்களது சொத்து விபரங்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் தகவல்களை பெற்றுக் கொள்ள உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் பிரகாரம் இந்த அமைச்சரவை அமைச்சர்கள் ஆறு பேரினதும் சொத்துக்கள் குறித்த தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடமிருந்து விரைவில் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளிடம் சொத்து க்கள் தொடர்பில் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஆறு அமைச்சர்களது சொத்து விபரங்கள் தொடர்பில் பாரிய அளவு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பில் விரைவில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் தகவல்கள் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சர்கள் எந்த தொழிலும் மேற்கொள்ளாமல் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில் பாரைிய அளவில் சொத்துக்களை குவித்துள்ளனர் எனவும் இது தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த அமைச்சர்கள் தொடர்பில் தகவல்களை வழங்கியதன் பின்னர் சட்ட ஆலோசணைகளை பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.



