இத்தாலிக்கு படகு மூலம் செல்ல முயற்சித்தவர்களுக்கு நேர்ந்த கதி
லிபியாவிலிருந்து இத்தாலி அல்லது மோல்டாவிற்கு மத்திய தரைக்கடல் வழியாக ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பயணித்த 60 பேர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து இத்தாலிய கடலோரக் காவல்படையின் ஒருங்கிணைப்பில் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது 25 பேரை "மிகவும் பலவீனமான" நிலையில் மீட்டதாகவும், மயக்கமடைந்த இருவர் உலங்கு வானூர்திகள் மூலம் சிசிலிக்கு அனுப்பப்பட்டதாகவும் மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய தரைக்கடல் உலகின் மிக ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மாத்திரம் இந்த கடலைக் கடக்க முயன்ற கிட்டத்தட்ட 2500 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர்.
60 பேர் உயிரிழப்பு
அத்துடன் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 226 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று விபத்துக்குள்ளான படகு 7 நாட்களுக்கு முன்னர் லிபியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குப் பின்னர் அதன் இயந்திரம் பழுதடைந்தது.
இதன்பபோது தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் குறைந்தது ஒரு குழந்தை மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 60 பேர் வழியில் இறந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்றும் இன்றும் குறித்த படகில் இருந்து இரண்டு குழந்தைகள்
உட்பட மேலும் 200 பேரையும் மீட்டதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்