ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வரும் ஆறாம் நிலம் திரைப்படம்! பெருகும் ஆதரவு
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வரும் “ஆறாம் நிலம்”திரைப்படம் எமது ஐபிசி தமிழின் தயாரிப்பில் உருவாகி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படமாக உருவாக்கப்பட்டு ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் வெளிப்படுத்தும் இந்த திரைப்படம் எமது ஐபிசி தமிழின் யூரியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டுமென பல அரசியல் பிரமுகர்கள் இந்த திரைப்படத்திற்கு தமது பெரும் ஆதரவினை தந்த வண்ணம் உள்ளனர்.
ஐபிசி தமிழ் யூ ட்யூப் வழங்கும் ஆறாம்நிலம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் இன்றைய அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் இப்படத்தைக் காணவும். #Sixthland #ibctamil#ibcYouTube pic.twitter.com/rSwxZs1z9W
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 24, 2021
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam