பாடசாலைக்கு சென்ற முதல் நாள் ஆறு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் - கதறும் உறவுகள்
பதுளை நகரில் இன்றைய தினம் முதல் நாள் பாடசாலைக்கு சென்ற சிறுவன் வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சிவனேசன் வருண் பிரதீஷ் என்ற ஆறு வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் தமது பாட்டியுடன் பதுளையில் உள்ள பாடசாலைக்கு தரம் 1 அனுமதி பெற்று சென்றுள்ளனர்.
இதன்போது லொறியொன்று மோதியதில் வருண் பிரதீஷ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.பாட்டி படுகாயமடைந்த நிலையில், மற்றைய சிறுவன் அதிஷ்டவசமாக தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், லொறியின் சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பதுளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
