மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட ஆறு இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை அரசாங்கம் மியான்மருக்கு வழங்கிய உரிய விளக்கங்களைத் தொடர்ந்து, மனித கடத்தலில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக இருந்த ஆறு இலங்கையர்கள் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மியான்மரில் நிர்க்கதியான குறித்த இலங்கையர்கள் மியான்மர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு, இலங்கைக்கு திரும்புவதற்காக யாங்கூனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்கடத்தல் குழு
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கிவரும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்கடத்தல் குழுவினால் இந்த ஆறு இலங்கையர்களும் கடத்தப்பட்டனர்.
எனினும் அவர்கள் 2023, மே 25 ஆம் திகதியன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பேங்கொக் வழியாக கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஐஎம்ஓ என்ற இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் ஈடன் மியான்மர் அறக்கட்டளை இந்த திருப்பியனுப்பல் செயற்பாட்டுக்கு உதவியுள்ளன.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
