முல்லைத்தீவில் குளவிக்கொட்டிற்கு இலக்கான ஆறு பாடசாலை மாணவர்கள் மருத்தவமனையில்..!
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் 12ஆம் கட்டை தபால் நிலைய வீதியில் மாணவர்கள் பாடசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை, குளவிக்கொட்டிற்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு ஆறு பாடசாலை மாணவர்கள் மீது குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில், தர்மபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள இராணுவத்தினரின் பண்ணை ஒன்றிற்குள் இருந்தே இந்த குளவிகள் கலைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
மாணவிகளின் உடல் நிலமைகள்
பாதிக்கப்பட்ட மாணவிகள் முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவிகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், மருத்துவமனை சென்று மாணவிகளின் உடல் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளார்.
இந்த குளவி எங்கிருந்து வந்து கொட்டியுள்ளது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதுடன் தற்போது கடும் காற்று வீசிவருவதால் மரங்களில் உள்ள குளவிக்கூடுகள் காற்றினால் சேதமடைவதுடன் குளவிகள் பறந்து மக்களை தாக்குகின்றன.
இது தொடர்பில் மக்கள் விழிப்பாக செயற்படுமாறும் தவிசாளர் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






