அடுத்த 5 ஆண்டுகளுக்கு சீனாவை ஆளப்போகும் ஆறு பேர்
எதிர்காலத்தில் சீனாவை ஆட்சி செய்ய போகும் 6 நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சீனாவை ஆட்சி செய்யப்போகும் நபர்கள் யார் என்ற இறுதி தீர்மானத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
சீனாவின் அரசியல் தலைமை நிலைக்குழு என்பது சீன அதிபரின் அமைச்சரவைக்கு சமமானதாகும். இது கட்சிக்குள் உள்ள உயர்மட்டத்தின் உயர்மட்டமாக கருதப்படுகிறது.
நட்சத்திர அரசியல் சாதனை
மேலும் இந்த உயர்மட்டத்திற்கு வருவதற்கு பெரும்பாலும் ஒரு நட்சத்திர அரசியல் சாதனை மட்டுமன்றி, உள்கட்சி போட்டிகளில் திறமையான சூழ்ச்சியும் தேவைப்படுகிறது.
ஓர் ஆட்சிக்காலம் முடிவடைந்த பிறகு, நிலைக்குழுவில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுவது அசாதாரணமானது அல்ல. இந்த முறையும் அப்படித்தான் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நிலைக்குழுவுக்கு அதிபர் ஷி ஜின்பிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள், ஜாவோ லெஜி மற்றும் வாங் ஹுனிங்கைத் தவிர பெரும்பாலானோர் அணிக்கு புதியவர்கள். இதிலும் பெரும்பாலானோர் அதிபரின் விசுவாசிகளாகவே காணப்படுகின்றனர்.
லி கியாங்,ஜாவோ லெஜி,வாங் ஹுனிங்,காய் குய்,டிங் சூசியாங் மற்றும் லிஷி ஆகியோர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
You may like this video





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam
