வவுனியாவில் மேலும் அறுவர் கோவிட் தொற்றால் மரணம்
வவுனியாவில் நேற்றைய தினம் அறுவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர்.
குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இதேவேளை சுகவீனம் காரணமாக அவரவர்களது வீடுகளில் நேற்று முன்தினம் மரணமடைந்திருந்த 5 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவுகள் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் அவர்களிற்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




