நாட்டிற்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட மஞ்சளுடன் ஆறு பேர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 145 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.
கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில்
அதன்படி, கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி உடப்புவ கருகப்பனை மற்றும் கடலோரப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு குறித்த படகில் மூன்று (03) பைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்று நாற்பத்தைந்து (145) கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்புடன் நான்கு (04) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) நபர்கள் மற்றும் இரண்டு (02) மோட்டார் சைக்கிள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் 22 முதல் 52 வயதுக்குட்பட்ட பங்கதேனிய, வைக்கால மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஆறு சந்தேக நபர்களும் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
