இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி!
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வார இறுதியில் 294.28 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 293.91 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
அதேவேளை 303.12 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 302.61 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209.42 ஆகவும் விற்பனைப் பெறுமதி 218.33 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.33 ஆகவும் விற்பனைப் பெறுமதி 344.64 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 402.64 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184.57 ஆகவும் விற்பனைப் பெறுமதி 194.09ஆகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
7ம் அறிவு படத்தின் வில்லன் டாங்லியை நியாபகம் இருக்கா? முகம் எல்லாம் ஒட்டிப்போய் அடையாளமே தெரியலையே... Cineulagam
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri