வீட்டை உடைத்து உள்நுழைந்த நபர்கள்! பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை
கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புல்னேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 7ஆம் திகதி கல்னேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த 6 சந்தேகநபர்களும் நேற்று முன்தினம்(14.12.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று(16) தெரிவித்துள்ளது.
போதைப்பொருட்கள் மீட்பு
இதன்போது வீட்டை உடைத்து உள்நுழைந்த சந்தேகநபர்கள், பிராடோ ஜீப், தங்க நகைகள், பணம் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட, மொத்தமாக 5கோடியே 72இலட்சத்து 68ஆயிரம் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குருநாகல், மாவதகம மற்றும் வில்கமுவ பகுதிகளில் பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்ட நிலையில் குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 4 ஜோடி கையுறைகள், 4 கூர்மையான கத்திகள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வான் மற்றும் ஒரு லொறி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களால் திருடப்பட்ட பிராடோ ஜீப் மீகலேவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 59 லட்சத்து 39ஆயிரம் ரூபாய் (5,939,000/-) மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து பெறப்பட்ட பல சொத்துக்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றையதினம்(15.12.2025) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவர்களை தடுப்புக்காவலில் வைக்க கெகிராவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri