மட்டக்களப்பில் இடம்பெற்ற இரு வீதி விபத்து! இருவர் பலி
மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய இளைஞர்
வாழைச்சேனையில் இருந்து சந்திவெளி நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

வீதி விபத்தில் கிரான் பிரதான வீதியை சேர்ந்த 19 வயதுடைய சுரேந்திரன் கிறசன் என்ற இளைஞன் உயிரிழந்ததுள்ளார்.
கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 சிறுவர்கள்
இதேவேளை சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடித்தோணா பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்ததுடன் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளனர்.

வேககட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 15 வயதுடைய ஜெயசீலன் ஜெதுசன் என்ற சிறுவன் சம்பவ இடத்தில்உயிரிழந்ததுடன் 14, மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri