தமிழர்களை ஏமாற்றி அநுர ஆட்சிக்கு வந்தாரா..! சிவாநந்தன் ஜெனிற்றா கேள்வி

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Ashik Feb 11, 2026 07:10 AM GMT
Report

உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. ஆனால், அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளைப் பெற போராடியவர்களே. எமது உறவுகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவாநந்தன் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க புதிய நிர்வாக தெரிவு நேற்று(10.02.2026) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புதிய நிர்வாகத்தில் தலைவராக மீண்டும் உதயச்சந்திரா தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக லுஸ்ரின் மோகன்ராஜ், உப தலைவராக திருமதி ரஞ்சினி, உப செயலாளராக வேணி, பொருளாளராக இமாக்குலேற் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட தோடு, நிர்வாக உறுப்பினர்கள் 8 பேர் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட பெரும் அனர்த்தம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்

அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட பெரும் அனர்த்தம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைப்பாடு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009ஆம் ஆண்டு எமது உறவுகளை கையில் ஒப்படைக்கப்பட்டும், சரணடைந்தும், இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வைத்தும் கடத்திச் செல்லப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இந்த இலங்கை நாட்டில், ஆட்சிக்கு வந்து அரசுகளுக்கு தெரியாது.

தமிழர்களை ஏமாற்றி அநுர ஆட்சிக்கு வந்தாரா..! சிவாநந்தன் ஜெனிற்றா கேள்வி | Sivananthan Jenitra Speech

அத்துடன், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்காமல் சுமாராக 16 வருடங்களை கடந்து தொடர்ந்தும் எம் உறவுகளுக்காக போராடி வருகின்றோம். எமது உறவுகள் எங்கே என்று கேட்டு தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.

ஆனால் அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்று பதில் கூற முடியாத அரசு, அவர்களை நம்பி சரணடைந்த அல்லது கையில் ஒப்படைத்த எமது உறவுகளை என்ன செய்தார்கள் என்று கேள்விக்குறியாக உள்ளது.

அதன் பின்னர், மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் பொய் பிரச்சாரங்களை கூறி எமது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது. தற்போது போராட்டக்குழுவில் இருந்து வந்துள்ள அநுர அரசும் இன்று போலி நாடகம் ஆடி வருகிறது.

அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி தெரியும் என்று கூறினார். ஆனால் அநுர ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் கடந்துள்ள போதும், எந்த ஒரு தீர்வும் எட்டப்படாத நிலையில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்காமல் உள்ளார். 

 30 வருடங்களாக போராடும் உறவுகள்

எமது உறவுகளை அழித்ததே இந்த இராணுவம் தான். ஒரு நாட்டில் இரண்டு இனம் வாழ்கின்ற போது ஓர் இனத்தை அழித்து ஓர் இனம் தெற்கிலே வெற்றி விழா கொண்டாடியுள்ளது.

தமிழர்களை ஏமாற்றி அநுர ஆட்சிக்கு வந்தாரா..! சிவாநந்தன் ஜெனிற்றா கேள்வி | Sivananthan Jenitra Speech

நாங்கள் இந்த நாட்டிலே மனிதர்களாக வாழ்வதற்கு உரிமை இல்லையா? நாமும் ஒரு தேசிய இனம். 30 வருடங்களாக எமது இளைஞர், யுவதிகள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எமது உரிமைகள் அப்போது மறுக்கப்பட்டிருந்தது. எமது உரிமைகளுக்காக அவர்கள் போராடியவர்கள்.

உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. அவர்கள் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லவில்லை.

அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராடியவர்கள். எனவே, வடக்கு கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் ஒற்றுமையுடன் எமது உறவுகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை ஏமாற்றி அநுர ஆட்சிக்கு வந்தாரா..! சிவாநந்தன் ஜெனிற்றா கேள்வி | Sivananthan Jenitra Speech

சட்டப்பூர்வ அனுமதியில்லை - பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அமைச்சரின் அறிவிப்பு

சட்டப்பூர்வ அனுமதியில்லை - பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அமைச்சரின் அறிவிப்பு

இலங்கை வரைபடத்திலிருந்து மறைந்துபோகும் அபாயத்தில் முக்கிய கிராமம்

இலங்கை வரைபடத்திலிருந்து மறைந்துபோகும் அபாயத்தில் முக்கிய கிராமம்

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US