அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்: சுமந்திரன் தரப்புக்கு சிவமோகன் சாட்டையடி
தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரிய ஆயுதப் போராட்டம்
இன்று தமிழினம் பாரிய ஆயுதப் போராட்டத்தின் பின் யாரும் பொறுப்பெடுக்க முடியாத நிலையில் விடப்பட்டுள்ளது.

உண்மையில் தமிழரசுக் கட்சி தான் ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஈழ விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு கட்சி. ஆனால் துரதிஸ்ட வசமாக அக் கட்சி இக்கட்டில் சிக்கியுள்ளது.
இன்று கட்சியின் பொதுக்குழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமையால் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கட்சியானது அலிபாவாவின் கையிலும், அவருடன் சேர்ந்த 19 திருடர்களின் கையிலும் மாட்டிக் கொண்டுள்ளது" என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri