தமிழீழ தனியரசு அமைவதே தீர்வு! சிவாஜிலிங்கம் உறுதி
சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தமிழீழ தனியரசு அமைவதே தீர்வு என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதியளித்துள்ளார்.
தற்போது இந்திய அரசாங்கத்தின் தொடர் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளார்.
எனினும் அந்தக் கப்பலின் பயணம் தொடர்கிறது அது இலங்கைக்கு வருவதில் தான் தாமதமே தவிர, அதன் பயணம் தடைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,