எம் மக்களின் தலைவிதியை எம் மக்களே தீர்மானிக்க வேண்டும்..! எம்.கே.சிவாஜிலிங்கம்
தமிழ் மக்கள் நவீன காலனித்துவதிலிருந்து விடுபட வேண்டுமாக இருந்தால், அவர்களின் விதியை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (12.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் மற்றும் சிங்களவர்கள் ஆகியோரின் காலனித்துவம் மற்றும் நவகாலனித்துவத்தில் இலங்கை தமிழர்கள் 400 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை மற்றும் அனைவருக்கும் குடியுரிமை ஆகிய அம்சங்களின் மூலமே தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
