பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் நிலை சாதகமாக இல்லை! உபுல் ரோஹண
பயணக் கட்டுப்பாடுகளை நீக்க நாட்டின் நிலைமை சாதகமாக இல்லை என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே 14ம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது சாத்தியமில்லை என அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து பயணக் கட்டுப்பாடுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பது பொருத்தமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயணக் கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான மக்கள் தினமும் வீடுகளை விட்டு வெளியேறுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri