ஆட்சி மாறினாலும் நாட்டின் நிலைமை மாற போவதில்லை : திஸ்ஸ குட்டியராச்சி
நாட்டின் தற்போதைய அரசாங்கம் சரியில்லை என்றால், அரசாங்கத்தை வீட்டுக்கு ஆட்சி அதிகாரத்தை யாரிடம் கையளிப்பது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவ்வாறு புதிய அரசாங்கத்திடம் ஆட்சி அதிகாரத்தை கையளித்த பின்னர், மக்கள் வரிசைகளில் நிற்பது முற்றாக இல்லாமல் போய்விடுமா? டொலர் தட்டுப்பாடு நீங்கி விடுமா, எரிபொருள் விலைகள் குறைந்து விடுமா?.
அரசாங்கம் மாறி, ஆட்சியாளர் மாறினார் என்பதற்காக நிலவும் நிலைமையில் மாற்றம் ஏற்பாடாது என்பதே உண்மையானது எனவும் திஸ்ஸ குட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri