எரிபொருளுக்கு பெப்ரவரியில் ஏற்பட போகும் நிலைமை
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் உலக சந்தையில் ஒரு பெரல் கச்சாய் (Crude oil) எண்ணெயின் விலை 100 டொலர்களை நெருங்கும் என எரிபொருள் சம்பந்தமான பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் குளிர் காரணமாக அந்நாடுகளில் எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை இதற்கு பிரதான காரணமாக அமையும் என அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் ஒரு பெரல் கச்சாய் எண்ணெயின் விலை 87 டொலர்களாக அதிகரித்தது. இது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட அதிகளவான விலை உயர்வு எனக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், உலக சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்தால், எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கை கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பொருளாதாரத்திற்கு இந்த நிலைமையால் பாதிப்பு ஏற்படும். இவ்வாறான நிலைமையில், இலங்கையில் எரிபொருளின் விலைகளை அதிகரிக்காது போனால், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.