கச்சதீவை சீன இராணுவம் ஆக்கிரமித்தால் நிலைமை மோசமடையும்! வெளியான எச்சரிக்கை
கச்சதீவை சீன இராணுவம் ஆக்கிரமித்தால் நிலைமை மோசமடையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வர முயற்சிற்பது, கொழும்பில் கடுமையாக பிரசன்னமாகி இருப்பது, வடக்கு கிழக்கில் மன்னாரை நோக்கி தங்கள் பார்வையை திருப்புவது எல்லாம் நடந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சீனாவின் ஆதிக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் போகக் கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக இருக்கின்றது.
கச்சைத்தீவு பிரச்சினையை இந்தியா இரண்டு விதமாக நோக்குகிறது. சீனா இந்தியாவிற்கு இடையிலான போட்டியில் இலங்கை சாதகமாக காய் நகர்த்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |