சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தனது உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை திருகோணமலை கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு மேற்கொண்டிருந்தார்
. இதன்போது சுதேச வைத்திய அபிவிருத்தி மற்றும் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், வைத்தியசாலையையும் பார்வையிட்டு அதன் நிறைகுறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
விசேட ஔடதம் ஒன்றினை அனைத்து பௌத்த விகாரைகளுக்கும் எடுத்துச்செல்லும் வேலைத்திட்டம் ஒன்றிற்காக நேற்றைய தினம் திருகோணமலைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ளதா என 37 தேசிய ஒளடதங்கள் தொடர்பில் பரிசோதனைகள் நடைபெற்று வரும் இந்நிலையில், அனைத்து ஊடகங்களும் ஒரு தயாரிப்பிற்கு மாத்திரம் கவனத்தினை செலுத்தி வருகிறது.இதனை இட்டு தாம் வருத்தமடைவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சுதேச வைத்திய நிலையங்களில் தயாரிக்கப்படுகின்ற மருந்து வகைகள் பல வகைகளில் நோய்களைக் குணமாக்கியிருக்கிறது.
அதனை பலர் கண்டுகொள்ளாதது வேதனையளிப்பதாகத் தெரிவித்த அவர் இன்னும் ஓரிரு நாட்களில் குறித்த பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் தாம் வெளியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan