நாடாளுமன்றத்தினூடாக ஜனாதிபதித் தேர்தலை தடுப்பதற்கான முயற்சி: சிறிநேசன் கேள்வி
தற்போது நாடாளுமன்றத்தினூடாக ஜனாதிபதித் தேர்தலை தடுப்பதற்கான முயற்சி
எடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நேற்றைய தினம்(20.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனை அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது மக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதனை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சென்றுள்ளது.
ஏற்கனவே மாகாணசபைத் தேர்த்தல் நடைபெறும் என மக்கள் ஏமாற்றப்படிருக்கின்றார்கள்.
மாகாணசபை கலைக்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகள் ஆகின்ற போதிலும் தேர்தல் நடைபெறவில்லை.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என மக்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தும் அதுவும் இன்னும் நடைபெறவில்லை.
அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா? அல்லது நடைபெறாதா? என்ற கேள்வியோடு இருக்கின்றார்கள்.
ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலை நிறுத்துவதற்காக அல்லது முடக்குவதற்காக 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
எனினும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்தான் எனவே தேர்தல் நடைபெறும் என நீதித்துறை தெரிவிக்கின்றது.
இந்தநிலையில், தற்போது நாடாளுமன்றத்தினூடாக இந்த தேர்தலை தடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
