மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பந்தனின் நினைவேந்தல்
மறைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கான (R. Sampanthan) அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி நகரில் நடைபெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் களுவாஞ்சிகுடி வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை (06.07.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உபதலைவர் பா.அரியநேத்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் க.சேயோன் மற்றும் மகளிர் அணி தலைவி உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
ஈகைச்சுடர்
இதன்போது, இரா.சம்பந்தனின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை தலைவர்களின் மனங்கள் நோகாத வகையிலும் முஸ்லிம் மக்களை
அரவணைத்துச்செல்லும் வகையிலும் சம்பந்தனின் பேச்சுகள்
அமைந்திருந்தன என ஞா.சிறிநேசன் இதன்போது தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri