அருட் தந்தை சிறில் காமினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது
இலங்கை கத்தோலிக்கச் சபையின் பேச்சாளா் வணக்கத்துக்குாிய அருட்தந்தை சிறில் காமினி தாக்கல் செய்துள்ள மனுவை எதிா்வரும் (நவம்பர்) 8ஆம் திகதியன்று விசாணைக்கு எடுத்துக்கொள்ள உயா்நீதிமன்றம் தீா்மானித்துள்ளது.
தம்மை குற்றப்புலனாய்வுப்பிரிவினா், கைதுசெய்வதை தடுக்கக்கோாி அருட்தந்தை சிறில் காமினி, இந்த மனுவை நேற்று தாக்கல் செய்தாா்
உயிா்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடா்பில் அண்மையில் கருத்துரைத்திருந்த சிறில் காமினி, இலங்கையின் அரச புலனாய்வுப் பிாிவுத்தலைவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டிருந்தாா்.
இந்தநிலையில் அருட்தந்தை சிறில் காமினியின் கருத்துக்கள் தமக்கு அவதூறை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தொிவித்து அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர், குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாட்டை செய்திருந்தாா்.
இதனையடுத்தே அருட்தந்தை சிறில் காமினி, உயா்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார்.