யாழ்.பல்கலைக்கழக உளச்சார்புப் பரீட்சைகக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு
யாழ். பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கான மாணவர்களைத் தெரிவு செய்யும் உளச்சார்புப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இம்மாதம் 30.09.2023 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 12.00 மணிவரை விண்ணப்பபடிவம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பதிவாளர் அறிவித்துள்ளார்.
திகதி மாற்றத்திற்கானக் காரணம்
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களிடமிருந்து குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசேட தகுதிகளைக் அடிப்படையாக் கொண்டு சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்கான முடிவுத் திகதி கடந்த 21 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மாணவர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் திகதி மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri