“சேர் பெய்ல்”- ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் தோல்விகளை அடுக்கிய எதிர்கட்சி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தோல்வி (Failed) கண்டுள்ளதாக கூறிவந்தவர்கள் இன்று “சேர்“ சிறந்தவர் என்று கூறுவதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்துக்குள் ஜனாதிபதியின் நடைமுறைகளை விமர்சித்து வந்தவர்கள் இன்று ஜனாதிபதி செயற்பாடுகளை பாராட்டுகிறார்கள் என்பதை மையப்படுத்தியே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், “சேர்” கல்வியில் தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்
இணையக்கல்வி மற்றும் இலவச சீருடை விடயத்தில் அவர் தோல்வி கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுகாதாரத்தில் “சேர்“ தோல்விக்கண்டுள்ளார்.
கொரோனாவை விரட்ட முட்டியை ஆற்றில் விட்டதன் மூலம் அவர் சுகாதாரத்தில் தோல்விக்கண்டுள்ளார்.
இறுதியில் சுகாதார அமைச்சரையும் பதவியில் விலக்கினார்.
விவசாயத்தில் சேர் தோல்விக்கண்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை இலவசமாக வழங்கியதாக குறிப்பிட்டார்.
விவசாயத்துறையில் அவருக்கு விடயங்கள் தெரியாவிட்டால் அவர் தோல்விக்கண்டுள்ளதாகவே கருதப்படும் என்று துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொருளாதாரத்தில், கணக்கியல் மற்றும் வணிகத்தில், சேர் தோல்வி கண்டுள்ளார்.
கலாசாரத்தில், சுற்றாடலிலும் 'சேர்' தோல்வி கண்டுள்ளதாக இந்துனில் தெரிவித்தார்
இந்தநிலையில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்ள தயங்குவதன் மூலம் “சேர்“ எதிர்வரும் மூன்று வருடத்திலும் தோல்வியை தழுவப்போவதாக இந்துனில் கூறினார்.