சீனாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் ஏற்றுமதி: வெளியான தகவல்
சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் முதல் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலிய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு ஏற்றுமதிகளும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஆகஸ்ட் முதல், விலை சூத்திரத்தின் கீழ் அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும்.
அந்நிய செலாவணி நெருக்கடி
தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இந்த ஆண்டு மே மாதம் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டது.
புதிய ஒப்பந்தத்தின் கீழ் சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்யவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |