மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு: வெளியான அறிவிப்பு
சினோபெக் நிறுவனம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளன.
இதன்படி 355 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.
420 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.
எரிபொருள் விலை சூத்திரம்
377 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
ஓட்டோ டீசலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது லீற்றர் 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.
இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
