தமிழர்களுக்கான தீர்வை தர திராணியற்றவர்களே சிங்கள தலைவர்கள்: சிறீதரன் (video)
சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். நெடுந்தீவு பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (15.02.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், கடந்த காலத்தில் நோர்வே அனுசரணையில் இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஜெனிவாவில் பலகட்ட பேச்சுக்கள் நடைபெற்றன.
நெடுந்தீவு பகுதியின் ஆக்கிரமிப்பு
அவை அனைத்தும் தமிழர்கள் கொண்டிருந்த ஆயுத பலத்தை மையமாகக் கொண்டே நடைபெற்றுள்ளது.
அந்த காலப்பகுதியில் நாங்கள் ஒரு பலமான சக்தியாக இருந்தோம் அப்போது எல்லோரும் எங்களை திரும்பிப் பார்த்தனர்.
நெடுந்தீவு பகுதி தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காணப்படுகிறது.
இப்போதும் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலையில் காணப்பட்டதோடு கடந்த காலங்களில் ஈ.பி.டி.பியினர் பெரும் அநியாயங்களை செய்தனர்.
நாங்கள் இந்த பிரதேசங்களில் காலடி வைக்க முடியாத பகுதியாக இருந்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக வந்தபோது தம்பட்டி பகுதியில் வைத்து இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர் என குறிப்பிட்ட அவர் கடந்த 2011ஆம் ஆண்டில் ரணல் நெடுந்தீவுக்கு வந்த போது இரு சக்கர வண்டியிலேயே பயணித்தார். ஆனால் இன்று அவர் ஜனாதிபதியாக வந்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
