பௌத்த பிக்கு பார்வையிட்டு சென்ற இடத்தில் பெரும்பான்மையின கடற்றொழிலாளர்களின் அடாவடி
முல்லைத்தீவில் அனுமதியின்றி தொழில் செய்வதற்காக பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள் புதிதாக வாடிகளை அமைத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிக்கு சில நாட்களுக்கு முன்னர் பௌத்தபிக்கு ஒருவர் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு சென்றதாகவும், இது ஒரு குடியேற்ற முயற்சி எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புலிபாய்ந்தகல்லிற்கு இன்றையதினம் (09.08.2023) கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்களும்,கொக்குதொடுவாய் கிழக்கு கிராம அலுவலரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
குறித்த இடத்திற்கு 18 மேற்பட்ட பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள் நான்கு படகுகளுடன் தொழில் செய்ய வந்திருப்பதும், அவர்கள் அரிச்சந்திரன் எனும் பெயரிலையே கடற்தாெழில் திணைக்களத்திற்கு கடிதம் வழங்கப்பட்டிருந்ததும் இதன்போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுமதியின்றிய கடற்றொழில்
இதனையடுத்து குறித்த பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள் தமக்கு கடற்தாெழில் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாக கூறி கடிதத்தை காண்பித்துள்ளனர்.
எனினும்,அக்கடிதத்தில் நான்கு படகுகளுக்கு கடற்றொழிலுக்கான அனுமதி வழங்ககோரி சிபாரிசு செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளரால், பிரதேச செயலாளருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரதேச செயலாளரால் இதுவரை அனுமதி வழங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு,அவ்விடயத்தினை குறித்த பெரும்பான்மையினத்தவர்களுக்கு தெளிவுபடுத்தி, பிரதேச செயலகத்தில் நீங்கள் அனுமதி பெறவேண்டும் எனவும் அனுமதி இல்லாததனால் புதிதாக அமைக்கப்பட்ட வாடி அகற்றப்பட வேண்டும் எனவும் கிராம சேவையாளர் கூறியியுள்ளார்.
கிராம சேவையாளரிளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு தவறினால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறித்த நபர்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில்,
இவ் விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், நேரில் சென்று பார்வையிட்டதுடன் மீனவ பிரதிநிதிகள் சிலரிடம், தொழில் செய்யும் எமது கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடிய போது 150 படகுகள் வரையில் குடும்பங்களாக புலிபாய்ந்தகல் பகுதிக்கு வந்து தொழில் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிகள் அமைப்பதற்கான பொருட்கள் குறித்த
இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும், சில நாட்களுக்கு முன்னர் குறித்த
இடங்களை பௌத்தபிக்கு ஒருவர் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு
சென்றதாகவும், இது ஒரு குடியேற்ற முயற்சிக்கான செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.








நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
