தமிழ் பொது வேட்பாளரை தனி ஒரு கட்சி தீர்மானிக்க முடியாது: வியாழேந்திரன் சுட்டிக்காட்டு
தமிழ் பொது வேட்பாளர் என்பது தனி ஒரு கட்சியால் தீர்மானிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆரையம்பதி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் கொண்ட கட்டிடத்தொகுதி திறப்பு விழாவின் பின்னர் கருத்து தெரி்விக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
தெடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“ஒட்டுமொத்த வடக்கு - கிழக்கு மலையக இலங்கையில் உள்ள தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைமைகள் அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைத்து தான் தமிழ் பொது வேட்பாளரின் விடயத்தை பற்றி பேச வேண்டும்.
மக்களினுடைய அபிலாசை
அதை விடுத்து மட்டக்களப்பில் நான்கு பேர் சேர்ந்து பொது வேட்பாளர்களை தீர்மானிக்கின்றார்கள். இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும்.
ஒட்டுமொத்த தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கான களத்தினை அமைக்காமல் விரும்பியவாறு ஒவ்வொருவரும் நான்கு பேர் கூடுவது மூன்று பேர் கூடிக்கொண்டு இவ்வாறான விடயங்களை பேச முடியாது.
இது முக்கியமான விடயம். ஏனெனில் வர இருப்பது ஜனாதிபதி தேர்தல். நாங்கள் தமிழர்கள் மிக கவனமாக காய்களை நகர்த்த வேண்டும் ஏனென்றால் உங்களுடைய நீண்ட கால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற வேண்டும். உடனடி பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற வேண்டும். அபிவிருத்தி சார்ந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அனைத்தினையும் கருத்தில் கொண்டு தான் நாங்கள் இந்த ஜனாதிபதி விடயத்திலே மிக கவனமாக செயல்பட வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |