ஊழல் வழக்கு: அமைச்சர் ஈஸ்வரன் மீது சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை

Singapore
By Dharu Jul 16, 2023 10:45 AM GMT
Report

ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ஓங் பெங் ஆகியோரும் இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி அந்நாட்டு ஊழல் புலனாய்வுப் பிரிவினர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை கைது செய்தனர்.

ஊழலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், அப்படியானால் அமைச்சர் ஒருவர் ஊழலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது என்றும் ஊழல் புலனாய்வுப் பணியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஊழல் தொடர்பான விசாரணை

ஊழல் வழக்கு: அமைச்சர் ஈஸ்வரன் மீது சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை | Singapore Transport Minister Arrested For Fraud

இந்நிலையில் கைது செய்யப்பட்டதன் பின்னர், விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சரை பிணையில் விடுவிக்க ஊழல் புலனாய்வுப் பணியகம் ஏற்பாடு செய்துள்ளதுடன் அவரது கடவுச்சீட்டை பணியகம் கையகப்படுத்தியுள்ளது.

ஊழல் தொடர்பான விசாரணைக்கு போக்குவரத்து அமைச்சர் ஆதரவு அளித்ததாகவும், அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊழல் புலனாய்வுப் பிரிவு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி சிங்கப்பூர் ஊழல் விசாரணைப் பணியகம் அந்நாட்டு பிரதமர் லீ சியாங் லாங்கிற்கு, ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனிடம் விசாரணை நடத்த விரும்புவதாக அறிவித்தது.

இதற்கமைய குறித்த கோரிக்கையை அனுமதித்த பிரதமர், எதிர்வரும் 6ஆம் திகதி போக்குவரத்து அமைச்சரிடம் விசாரணை நடத்த ஊழல் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மூத்த இராஜாங்க அமைச்சர் சீ ஹாங் டாட், போக்குவரத்து துறையின் தற்காலிக அமைச்சராக செயல்படுவார் என்றும் அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US