கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்ட சிங்கப்பூர் கப்பலால் ஏற்படவுள்ள ஆபத்து
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் கடலில் தீப்பற்றிக்கொண்ட சிங்கப்பூர் கப்பலில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்பட்டால் அது நீர்கொழும்பு ஏரிக்கு செல்லும் ஆபத்து இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர இந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தீப்பற்றியுள்ள கப்பலில் இருந்து எந்த எண்ணெய் கசிவையும் கண்டுபிடிக்கவில்லை எண்ணெய் கசிவு ஏற்பட்டால் உடனடியாக அதற்குரிய மாற்று நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு எண்ணெய் கசிவு மற்றும் சிதறயல்களை உறிஞ்சக்கூடிய பொருட்கள் போன்ற உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாவும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீப்பரவல் ஏற்பட்ட கப்பலில் தொடர்ந்தும் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தீPயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளும் இந்திய இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.