தீவிரமடையும் டெங்கு பாதிப்பு! சிறப்பு நுளம்புக்களை உற்பத்தி செய்யும் சிங்கப்பூர்
உலகளாவில் ரீதியில் தற்போது பரவிவரும் குரங்கம்மை தொற்றினையடுத்து டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில்,சிங்கப்பூரில் நடப்பு ஆண்டில் 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், கடந்த மார்ச் மாதத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெங்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய நுளம்புக்களை அழிக்க ஒல்பேச்சியா என்ற திட்டம் ஒன்றை விரைவுப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
வாரத்திற்கு 50 இலட்சம் ஏடிஸ் நுளம்புக்கள் உருவாக்கம்
இதுபற்றி அந்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி கிரேஸ் ஃபூ கூறுகையில், தொடக்கத்தில் ஒவ்வொரு வாரமும் 20 இலட்சம் ஏடிஸ் நுளம்புக்கள் உற்பத்தி செய்யப்படும். அதன்பின்னர், வாரத்திற்கு 50 இலட்சம் ஏடிஸ் நுளம்புக்களை என இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.அந்த நுளம்புக்களை ஒல்பேச்சியா என்ற பாக்டீரியா காணப்படும்.
இந்த பாக்டீரியாவை சுமந்து கொண்டு செல்லும் நுளம்புக்கள் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பெண் நுளம்புக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது, அவற்றின் முட்டைகள் குஞ்சு பொறிக்காது. அதனால், நுளம்புக்களும் உற்பத்தியாகாது.
டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில், இயற்கையாக உருவான நுளம்புக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்த சிறப்பு நுளம்புக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)