சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும்- வலியுறுத்தும் அரசாங்க அமைச்சர்
அடுத்த தலைமுறையினர், சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் அமைச்சர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிச் சங்கம் நடத்திய நிகழ்வின்போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் தமிழ்
அடுத்த 20, 30 ஆண்டுகளில், தன்னைப் போல இயல்பாக மேடையில் தமிழ் பேசக் கூடிய ஒரு அமைச்சர் இருப்பாரா என்ற கேள்வியை, நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்த தலைமுறையினர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். இன்று ஆங்கிலத்தில் பேசுவதை பலர் உயர்வாக கருதுகின்றனர்.
இதன் காரணமாக தமிழ் பயன்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் தமிழ் ஒன்றாகும்.
சிங்கப்பூர் நாடாளுமன்றம்
எனினும் தமிழைப் பேசாதவர்களால் அது தொடர்ந்து மதிக்கப்படும் மொழியாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
1960- 1970ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் நாடாளுமன்றில் சில உறுப்பினர்கள் அவையில் தமிழில் விவாதித்தனர்.
எனினும் இன்று பல இளைஞர்கள் முதன்மையாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.
இது தமிழை மட்டுமல்ல, பிற தாய்மொழி மொழிகளையும் பாதிக்கிறது என்று சிங்கப்பூரின் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
