சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளி அலங்காரம் (Photos)
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கருப்பொருளாக ராதை மற்றும் கிருஸ்ணரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
கண்களுக்கு விருந்தாக பல வண்ணமயமான அலங்காரங்களுடன் சிராங்கூன் வீதி நுழைவாயில் ஒவ்வொரு வருடமும் போல இம்முறையும் களைகட்டவுள்ளது.
இந்த நிலையில் இம்முறை புதிதாக யானை உருவச்சின்னத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர்.
அறிமுகப்படுத்தப்படும் உருவச்சின்னம்
லிட்டில் இந்தியாவிற்கு நிரந்தர அடையாளத்தை கொண்டு வரும் வகையில் இந்த உருவச்சின்னத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லிட்டில் இந்தியாவில் உணவுச் சந்தையும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உணவுச் சந்தையானது எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை இன்னும் குதூகலப்படுத்தும் விதமாக லிட்டில் இந்தியாவில் இன்னும் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.