இலங்கைக்கு மனிதாபிமான நிதியுதவியை வழங்கிய சிங்கப்பூர்
சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு ஆதரவாக, சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர்ஆரம்ப நிதியை வழங்கியுள்ளது.
இந்தத் தொகை, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது நிதி திரட்டும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சு இன்று(12)அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நிதியுதவி
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சமூகங்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய 50,000 சிங்கப்பூர் டொலர் உறுதியளித்துள்ள நிலையில், சிங்கப்பூரின் இந்த பங்களிப்பு கூடுதல் உதவியாக அமையும்.

இதனிடையே சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் சூறாவளியால் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளுக்கு இரங்கல் தெரிவித்து, முறையே இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam