தகவல்கள் இல்லாத 'சிம்' காட்கள் செயலிழக்கச் செய்யப்படும்! பிரதியமைச்சர் எரங்கவின் அதிரடி..
இலங்கையில் சுமார் 9 இலட்சம் SIM அட்டைகளுக்கான தனிநபர் தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை. அதனால், தகவல் இல்லாத SIM அட்டைகளுக்கான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையெனில் அந்த SIM அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர், இந்த ஒன்பது இலட்சம் தொலைபேசி SIM அட்டைகள் கணினி முறைமையில் இருக்கிறது.
வணிக SIM அட்டைகளால் அதிகரித்துள்ள குற்றங்கள்
2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட SIM அட்டைகளை பதிவு செய்வதற்கான ஒழுங்குமுறையில் இருந்த குறைபாடுகளை சீர்செய்து, பதிவு முறையை சரியாக அமல்படுத்துவதற்கே இந்த பதவி கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது 897,802 SIM அட்டைகள் உள்ளன. அவற்றை பாவிக்கும் நபர்களின் அடையாளத் தகவல்கள் முறைமையில் இல்லை. நாட்டில் 245,811 வணிக SIM அட்டைகள் உள்ளன.
இந்த SIM அட்டைகள் நாட்டில் நடைபெறும் பாரிய கொள்ளைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு தரவுகள் அவசியமாகின்றன.

எனவே, தரவு இல்லாத SIM அட்டைகள் பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. அதனால் இந்த தகவல்கள் தேவைப்படுவதால் மீள் பதிவு செய்யும் ஒழுங்குமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இதைத் தவிர குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வழியில்லை. இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். எதிர்க்கட்சி தவறான கருத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
பெரும்பாலானோர் SIM அட்டைகளை முறையாக பயன்படுத்துகின்றனர். ஆனால், தரவுகள் இல்லாத SIM அட்டைகளுக்கு தகவல் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam