நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவது குறித்து மைத்ரியின் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாக முடியாது என தெரிவித்துள்ளார்.
சுகயீனம் காரணமாக முன்னிலையாக முடியாதென பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவர்கள் அவரை வீட்டிலேயே சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியதாகவும், வாக்குமூலத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட பயணத்திற்காக 1.66 பில்லியன் ரூபாய்க்கு மேல் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்போவதாக குற்றப் புலனாய்வுத் பிரிவு, அண்மையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam