ரணிலின் கருத்துக்கள் தொடர்பில் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ள அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
புதிய இலங்கையை உருவாக்குவதற்கு சர்வகட்சி அல்லது பல கட்சிகளை கொண்ட அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதவிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்துடன் தாம் உடன்படுவதாகவும், அதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் இந்தோ – பசிபிக் பொருளாதார சக்தி மையமாக நவீன ஏற்றுமதி செயல்முறைகளை நோக்கிய போட்டித்தன்மை கொண்ட சமூக சந்தைப் பொருளாதாரமாக இலங்கையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam