கொழும்பில் நடைபெறும் திறந்த வெளி சிலுவைப் பாதை
லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையில், கொழும்பு ஜோசப்வாஸ் மன்றம் நடத்தும் திறந்தவெளி சிலுவைப் பாதை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஜோசப்வாஸ் மன்றம், இன்றைய (18.02.2024) தினத்துடன் 28ஆவது வருடமாக இந்த திறந்தவெளி சிலுவைப் பாதையை நடத்துகின்றது.
கொழும்பு புதிய செட்டி வீதியில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், ஜிந்துப்பிட்டி புனித வேளாங்கண்ணி ஆலயம் வழியாக கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தை வந்தடையும்.
மனுக்குலத்தை பாவத்தில் இருந்து மீட்க தன்னுயிரை ஈந்த இயேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூர்ந்து மிகவும் பக்தியான முறையில் இந்த சிலுவைப்பாதை நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
